நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மாஜி படைவீரர்கள் தேர்தல் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம், பிப்.29: தேர்தல் பணிபுரிய நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த நல்ல உடல்நிலையில் உள்ள திடகாத்திரமான அனைத்து முன்னாள் படைவீரர்களும் தேர்தல் பணிபுரியலாம்.

தேர்தல் பணிபுரியும் முன்னாள் படைவீரர்கள் மத்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவு கட்டணம் மற்றும் மதிப்பூதியம் வழங்கப்படும். விரும்பம் உள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மாஜி படைவீரர்கள் தேர்தல் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: