₹7,300 கோடி செலவில் அமைக்கப்பட்ட 20 புதிய துணை மின் நிலையம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: எரிசக்தி துறை சார்பில் ₹ 7,300 கோடி செலவில் 20 புதிய துணை மின் நிலையங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில், ₹7300 கோடியே 54 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள 20 புதிய துணை மின் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதேபோல், ₹209 கோடியே 1 லட்சம் செலவில் 67 துணை மின் நிலையங்களில் 69 மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்தார். மேலும், நாகப்பட்டினத்தில் ₹4 கோடியே 95 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகக் கட்டடத்தை அவர் திறந்து வைத்தார்.

திருவள்ளூரில் இடையன்சாவடியில் 765 கி.வோ, சென்னையில் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம், திருவள்ளூரில் குஞ்சலம், திருமுல்லைவாயல் உள்ளிட்ட இடங்களில் ₹176 கோடியில் நிறுவப்பட்டுள்ள 10 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள், அதேபோல், திருவள்ளூரில் புறவழிச்சாலை பூந்தமல்லி ஆகிய இடங்களில் புதிய துணை மின் நிலையங்களும், என ஒட்டுமொத்தமாக ₹7,300 கோடியில் நிறுவப்பட்டுள்ள 20 புதிய துணை மின் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இதுமட்டுமின்றி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வீராபுரம், சென்னையில் போரூர் உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு மின் தொடரைமைப்புக் கழகம் சார்பில் ₹202 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் 63 துணை மின் நிலையங்களில் 65 மின் மாற்றிகளும், செங்கல்பட்டில் ஹிரநந்தனி, ஈஞ்சம்பாக்கம், மாதவரம் தோல் தொழிற்பேட்டை, மேனாம்பேடு ஆகிய இடங்களில் ₹ 6 கோடியே 38 லட்சம் செலவில் 4 துணை மின் நிலையங்களில் 4 மின் மாற்றிகள் என ₹209 கோடியே 1 லட்சம் செலவில் 67 துணை மின் நிலையங்களில் 69 மின் மாற்றிகளின் செயல்பாட்டினை முதல்வர் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மின் பகிர்மான வட்டத்தில் ₹4 கோடியே 95 லட்சம் செலவில் தரை மற்றும் முதல் தளத்துடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகக் கட்டடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, காந்தி, டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ராஜேஷ் லக்கானி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post ₹7,300 கோடி செலவில் அமைக்கப்பட்ட 20 புதிய துணை மின் நிலையம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: