மணிமங்கலம் அரசு பள்ளியில் அமைச்சர் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர்: மணிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீர் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம், மணிமங்கலம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 300க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மணிமங்கலம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது, ஒவ்வொரு வகுப்பறைகளாக சென்று, வகுப்பறையில் உள்ள மாணவர்களிடம் புத்தகத்தை வாசிக்க சொல்லி, வாசிப்பு திறனை சோதனை செய்தார்.

அப்போது, மாணவர்களிடம் ஆசிரியர்கள் உங்களுக்கு நன்றாக பாடம் எடுக்கிறார்களா, அதில் ஏதேனும் குறைகள் உள்ளதா என மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பொதுதேர்வு நெருங்குவதையொட்டி தேர்வுக்கு தயாராக இருக்க மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதையடுத்து, பள்ளியில் கழிப்பறை வசதி, பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்ட ஹை டெக் லேப், ஸ்மார்ட் கிளாஸ் போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post மணிமங்கலம் அரசு பள்ளியில் அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: