கொள்ளை வழக்கில் தந்தை கைதானதால் அவமானம் தாங்காமல் மகன் தற்கொலை

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாடெக்ஸ் காலனி ஐயப்ப நகரை சேர்ந்தவர் பிருத்விராஜ் (37). விஏஓவாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். கல் பட்டறை தொழில் செய்து வருகிறார். கடந்த 21ம் தேதி இரவு, இவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், ரூ.2.60 லட்சம், இரண்டு ஸ்மார்ட் வாட்சுகளை கொள்ளையடித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கீதாதேவி, எஸ்ஐ ராமச்சந்திரன் ஆகியோர் கொள்ளையரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அருப்புக்கோட்டை அருகே சாய்பாபா கோயில் பகுதியில் நேற்று சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றிருந்தவரை டவுன் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாகுளத்தை சேர்ந்த மலர்மன்னன் என்ற மாணிக்கம் (61) என்பதும், ஓய்வு விஏஓ வீட்டில் பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. மேலும் சென்னை, கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணிக்கம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அருப்புக்கோட்டை பகுதியில் குடியேறியதும், இவர் மீது காவல்நிலையங்களில் 41 திருட்டு, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மாணிக்கத்தை போலீசார் கைது செய்தனர்.

The post கொள்ளை வழக்கில் தந்தை கைதானதால் அவமானம் தாங்காமல் மகன் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: