ரஞ்சி கோப்பை ரவுண்ட்அப்

ரஞ்சி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், 3வது காலிறுதியில் விளையாடிய தமிழ்நாடு 3வது நாளே நடப்பு சாம்பியன் சவுராஷ்டிராவை வீழ்த்தி முதல் அணியாக காலிறுதிக்குள் நுழைந்தது.

காலிறுதியில் மத்திய பிரதேசம்
இந்தூரில நடந்த 4வது காலிறுதியில் மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 234, 2வது இன்னிங்சில் 107ரன்களில் ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் 172ரன் எடுத்த ஆந்திரா 170ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. தொடர்ந்து 3வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 95ரன் என சற்று வலுவாக இருந்தது. ஆனால் 4வது நாளான நேற்று விக்கெட்கள் மளமளவென சரிய ஆந்திரா உணவு இடைவேளைக்கு முன்பே 165ரன்னில் சுருண்டது. அதனால் மத்திய பிரதேசம் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று 2வது அணியாக அரையிறுதி வாய்ப்பு பெற்றது.

விதர்பா-கர்நாடகா
நாக்பூரில் நடக்கும் முதல் காலிறுதியில் விதர்பா முதல் இன்னிங்சில் 460, 2வது இன்னிங்சில் 196ரன் எடுத்தது. முதல் இன்னிங்சில் 286ரன் எடுத்த கர்நாடகா 4வது நாள் ஆட்ட நேர முடிவில் நேற்று ஓரு விக்கெட் இழப்புக்கு 103ரன் எடுத்தது. இன்னும் 268ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசிநாளான இன்று கர்நாடகா 2வது இன்னிங்சை தொடர்கிறது.

மும்பை-பரோடா
மும்பையில் நடைபெறும் 2வது காலிறுதியில் 2வது இன்னிங்ஸ் விளையாடும் மும்பை நேற்று 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 379ரன் குவித்துள்ளது. அதனால் 415ரன் முன்னிலைப் பெற்றுள்ளது. ஆட்டத்தின் கடைசி நாளான இன்று பரோடாவுக்கு களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஆட்டம் டிராவில் முடியும் வாய்ப்பு அதிகம். முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக மும்பை அரையிறுதிக்குள் நுழையும்.

The post ரஞ்சி கோப்பை ரவுண்ட்அப் appeared first on Dinakaran.

Related Stories: