இங்கிலாந்து பேராசிரியைக்கு அழைப்பு விடுத்த கர்நாடகா அரசு: பெங்களூரு வந்த இந்திய வம்சாவளி பேராசிரியரை திருப்பி அனுப்பிய ஒன்றிய அரசு!!

பெங்களூரு: பெங்களூரு வந்த இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து பேராசிரியர் நிடாஷா கவுல் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கிலாந்தின் லண்டனில் உள்ளது வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் பேராசிரியையாக பணியாற்றி வருபவர் நிடாஷா கவுல்.

இவர் கடந்த 24 மற்றும் 25 தேதிகளில் பெங்களூருவில் ஆளும் காங்கிரஸ் அரசின் சமூக நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒற்றுமை மாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டார். இதையடுத்து பேராசிரியர் நிடாஷா கவுல் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கினார். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்-ஐ தொடர்ந்து விமர்சிப்பவர் என கூறி குடியேற்ற அதிகாரிகள் தன்னை பல மணிநேரம் காத்திருக்கச் செய்ததாகவும். 24 மணிநேரம் தடைசெய்யப்பட்ட காத்திருப்போர் அறையில் தன்னை அடைத்து வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்தியா வருவதற்கான அனைத்து ஆவணங்கள் தன்னிடம் இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டதாக பேராசிரியர் நிடாஷா கவுல் குற்றச்சாட்டினார். டெல்லியில் இருந்து தன்னை அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவு வந்திருப்பதாக குடியுரிமை அதிகாரிகள் கூறியதாகவும் அவர் கூறினார். மேலும், கர்நாடக மாநில அரசு அனுமதி அளித்தபோது ஒன்றிய அரசு அனுமதி மறுப்பதாக பேராசிரியர் நிடாஷா கவுல் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

The post இங்கிலாந்து பேராசிரியைக்கு அழைப்பு விடுத்த கர்நாடகா அரசு: பெங்களூரு வந்த இந்திய வம்சாவளி பேராசிரியரை திருப்பி அனுப்பிய ஒன்றிய அரசு!! appeared first on Dinakaran.

Related Stories: