வேளாண் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு மண் புழு உர உற்பத்தி பயிற்சி

மதுரை, பிப். 25: மதுரை வேளாண் கல்லூரி மண் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மண்புழு உரத் தொழில்நுட்ப பயிற்சி டிவிஎஸ் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த ஒரு நாள் பயிற்சியினை மண் மற்றும் சுற்றுச்சூழல் துறை தலைவர் ஷிபா துவக்கி வைத்து மண்புழு உரத்தின் மகத்துவத்துவம், மண் வள மேம்பாட்டில் மண்புழு உரத்தின் அவசியத்தை விளக்கி கூறினார். சுற்றுச் சூழல் அறிவியல் பேராசிரியர் கண்ணன் பல்வேறு வகையான மண்புழுக்களைப் பற்றியும் மற்றும் உரமாக்கும் வழி முறைகளையும் முழுமையாக விளக்கினார்.

உதவி ஆசிரியர் முருகராகவன் மண்புழு உரத்தினால் மண் மற்றும் பயிர்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நீர்ப் பிடிப்பு திறன் அதிகரிப்பு, மண்புழு உரத்தில் இருக்கும் ஊட்டச்சத்துகள், மண் அமைப்பு மேம்படுவது பற்றி விரிவாக எடுத்து கூறினார். மேலும் மண்புழு உர உற்பத்தியை மாணவர்களுக்கு செயல் விளக்கம் மூலம் விளக்கம் அளித்தார். இப்பயிற்சியின் இறுதியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

The post வேளாண் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு மண் புழு உர உற்பத்தி பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: