ராமர் கோயில் திறந்த பிறகும் பீகாரில் நிதிஷ்குமாரை பா.ஜ இழுத்தது ஏன்: கம்யூனிஸ்ட் விளக்கம்

புதுடெல்லி: டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(எம்எல்) பொது செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தீபங்கர் கூறுகையில், ‘‘எதிர்கட்சிகளின் ஒற்றுமை பீகாரில் இருந்து துவங்கியது. நிதிஷ்குமாரை திரும்ப பெற்றதால் மிகப்பெரிய பங்கை பெறுகிறோம் என பாஜ நினைத்திருக்கலாம். ஆனால் பீகாரில் மதிப்பிழந்த அரசியல்வாதி என்றால் அது நிதிஷ்குமார் தான். அதே நேரத்தில் பீகாரில் வெற்றி பெறுவதற்கு ராமர் கோயில் போதுமானதாக இருந்திருந்தால் பாஜவுக்கு நிதிஷ்குமார் தேவைப்பட்டிருக்க மாட்டார் என்று மக்கள் கூறிவருகின்றனர். ஆனால் இது போதாது என்பது பாஜவுக்கும் தெரியும். அதனால்தான் நிதிஷ்குமாரை அவர்கள் மீண்டும் இணைத்தனர்” என்றார்.

The post ராமர் கோயில் திறந்த பிறகும் பீகாரில் நிதிஷ்குமாரை பா.ஜ இழுத்தது ஏன்: கம்யூனிஸ்ட் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: