வருவாய்த்துறையினர் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

 

கோவை, பிப். 24: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக நேற்று பணி புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை தலைவர் சையது உசேன் தலைமையில் நடந்தது. வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டத்தின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.

ஏற்கனவே, தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது பணி புறக்கணிப்பு மற்றும் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இதையடுத்து, வரும் 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வருவாய்த்துறையினர் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: