அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் செயல்விளக்க பயிற்சி

 

ஈரோடு,பிப்.24: வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகளுக்கு அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் செயல்விளக்க பயிற்சி நடைபெற்றது. இதுகுறித்து ஈரோடு மற்றும் சென்னிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாமுவேல் கூறியதாவது: ஈரோடு வட்டாரம்,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ்,செயல்படும் வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் வைராபாளையம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் செயல்படும் வண்ணாங்காட்டு வலசு கிராமத்தில் அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் செயல் விளக்கம் பயிற்சி நடைப்பெற்றது.

அங்கக வேளாண்மையின் சிறப்புகள்,உணவு பொருட்கள்,காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு திறன்கள்,அங்கக விளைப் பொருட்களை சந்தைப்படுத்தும் முறைகள் போன்றவற்றை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. செயல்விளக்க பயிற்சியில் சித்தோடு வேளாண்மை அலுவலர் ராம்ஜிவன்யா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் கிருத்திகா, உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளர் வைஜெயந்தி கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் செயல்விளக்க பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: