ஈரோடு,ஜூலை20:ஈரோட்டில் நாளை (21ம் தேதி) நடைபெற இருந்த குடியரசு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு அடுத்த மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஈரோடு மல்லிகை அரங்கில் நாளை (21ம் தேதி) குடியரசு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிர்வாக காரணங்களால் இம்மாநாடு அடுத்த மாதம் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் ஏற்கனவே திட்டமிட்டபடி கருத்தரங்கம் மற்றும் மாலையில் காளை மாட்டு சிலை அருகில் இருந்து நிமிர்வு கலைக் குழுவினரின் பறை இசையுடன் பேரணியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post குடியரசு சுயமரியாதை இயக்க மாநாடு ஆகஸ்ட் 25ம் தேதிக்கு மாற்றம் appeared first on Dinakaran.
