வெளியானது ஐபிஎல் அட்டவணை சென்னையில் மார்ச் 22ல் முதல் ஆட்டம்: சென்னை-பெங்களூர் மோதல்

மும்பை: இந்தியாவின் பிரபலமான உள்நாட்டு விளையாட்டுத் தொடரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ஆண்டு தோறும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடத்தப்படுமா அல்லது வௌிநாடுகளில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் ஐபிஎல் அட்டவணையை பிசிசிஐ நேற்று மாலை வெளியிட்டது. அதில் முதல் கட்டமாக மார்ச் 22ம் தேதி முதல் ஏப்.7ம் தேதி வரையில் 21ஆட்டங்களுக்கான பட்டியல் மட்டும் வெளியாகி உள்ளது.

‘எஞ்சிய ஆட்டங்களுக்கான பட்டியல் நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு அதற்கு ஏற்றவாறு இறுதிச் செய்யப்படும்’ என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்ட அட்டவணயைின் படி சென்னையில் நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. ெடல்லி கேபிடல்ஸ் அணிக்கான 2 உள்ளூர் ஆட்டங்களும் டெல்லிக்கு பதில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும்.

காரணம் மகளிர் ஐபிஎல் போட்டி டெல்லியில் மார்ச் 17ம் தேதி வரை நடக்கிறது. அதன்பிறகு களத்தை ஆயுத்தம் செய்ய வசதியாக இந்த முடிவு என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இறுதி ஆட்டம் உட்பட எஞ்சிய 53 ஆட்டங்கள் மே 26ம் தேதிக்குள்(ஞாயிறு) முடிக்கும் வகையில் 2ம் கட்ட அட்டவணை இருக்கும். காரணம் ஜூன் ஒண்ணாம் தேதி டி20 உலக கோப்பை அமெரிக்கவில் தொடங்குகிறது.

* போட்டி அட்டவணை

தேதி தொடக்கம் களம் மோதும் அணிகள்
மார்ச் 22 இரவு 8.00 சென்னை சென்னை-பெங்களூர்
மார்ச் 23 மாலை 3.30 முல்லன்பூர் பஞ்சாப்-டெல்லி
மார்ச் 23 இரவு 7.30 கொல்கத்தா கொல்கத்தா-ஐதராபாத்
மார்ச் 24 மாலை 3.30 ஜெய்பூர் ராஜஸ்தான்-லக்னோ
மார்ச் 24 இரவு 7.30 அகமதாபாத் குஜராத்-மும்பை
மார்ச் 25 இரவு 7.30 பெங்களூர் பெங்களூர்-பஞ்சாப்
மார்ச் 26 இரவு 7.30 சென்னை சென்னை-குஜராத்
மார்ச் 27 இரவு 7.30 ஐதராபாத் ஐதராபாத்-மும்பை
மார்ச் 28 இரவு 7.30 ஜெய்பூர் ராஜஸ்தான்-டெல்லி
மார்ச் 29 இரவு 7.30 பெங்களூர் பெங்களூர்-கொல்கத்தா
மார்ச் 30 இரவு 7.30 லக்னோ லக்னோ-பஞ்சாப்
மார்ச் 31 மாலை 5.30 அகமதாபாத் குஜராத்-ஐதராபாத்
மார்ச் 31 இரவு 7.30 விசாகப்பட்டினம் டெல்லி-கொல்கத்தா
ஏப்ரல் 1 இரவு 7.30 மும்பை மும்பை-ராஜஸ்தான்
ஏப்ரல் 2 இரவு 7.30 பெங்களூர் பெங்களூர்-லக்னோ
ஏப்ரல் 3 இரவு 7.30 விசாகப்பட்டினம் டெல்லி-சென்னை
ஏப்ரல் 4 இரவு 7.30 அகமதாபாத் குஜராத்-பஞ்சாப்
ஏப்ரல் 5 இரவு 7.30 ஐதராபாத் ஐதராபாத்-சென்னை
ஏப்ரல் 6 இரவு 7.30 ஜெய்பூர் ராஜஸ்தான்-பெங்களூர்
ஏப்ரல் 7 மாலை 3.30 மும்பை மும்பை-டெல்லி
ஏப்ரல் 7 இரவு 7.30 லக்னோ லக்னோ-குஜராத்

The post வெளியானது ஐபிஎல் அட்டவணை சென்னையில் மார்ச் 22ல் முதல் ஆட்டம்: சென்னை-பெங்களூர் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: