மயிலம்பாடி அரசு பள்ளியில் கலையரங்கம் கட்டும் பணி துவக்கம்

பவானி பவானி அருகே உள்ள மயிலம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணி நேற்று துவங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அன்னை ரவி தலைமை தாங்கினார் பவானி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் சவிதா சுரேஷ்குமார், பி.சதீஷ்குமார், அரசு வழக்கறிஞர் எஸ்.ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை பவுலின் நிர்மலா வரவேற்றார்.இப்பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்தில் ரூ.9 லட்சத்தில் கலையரங்கம் கட்டும் பணி பூமி பூஜையுடன் துவக்கி வைக்கப்பட்டது. மேலும், ரூ.6 லட்சம் மதிப்பில் மூன்று ஸ்மார்ட் போர்டு வசதி ஏற்படுத்தப்பட்டது. பவானி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.ஏ.சேகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஓய்வு பெற்ற ஆசிரியர் ராவுத்தா கவுண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மயிலம்பாடி அரசு பள்ளியில் கலையரங்கம் கட்டும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: