திருமணமான 10 மாதத்தில் கணவர் தற்கொலை

ஈரோடு: கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம், குணுகேரி தண்டா கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா மகன் ராஜா (20). இவரது மனைவி ரேஷ்மா (20). இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் கரும்பு வெட்டு தொழிலாளர்கள். கடந்த 8 மாதங்களாக கோபி புதுக்கரைபுதூரில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவர் ராஜாவுக்கு அல்சர் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் ராஜாவுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் களைக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி ராஜா இறந்தார். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post திருமணமான 10 மாதத்தில் கணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: