“எங்கள் தாய்மொழி – எங்கள் அடையாளம் – அதிகாரம்” – கவிஞர் வைரமுத்து தாய்மொழி தின வாழ்த்து!

சென்னை: பிப்ரவரி திங்கள் 21ம் நாள் உலகத் தாய்மொழி நாளாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி “இன்று உலகத் தாய்மொழித் திருநாள், வாழ்த்து அச்சம் இரண்டையும் பகிர்ந்து கொள்கிறேன்” என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “இன்று உலகத் தாய்மொழித் திருநாள், வாழ்த்து அச்சம் இரண்டையும் பகிர்ந்து கொள்கிறேன்.

தாய் என்ற அடைமொழிகொண்ட சொற்களெல்லாம் உயர்ந்தவை; உலகத் தன்மையானவை மற்றும்
உயிரோடும் உடலோடும் கலந்தவை

தாய்நாடு தாய்ப்பால் தாய்மொழி இவை எடுத்துக்காட்டுகள்

ஆனால், உலகமயம் தொழில்நுட்பம் என்ற பசிகொண்ட பற்கள் இரண்டும் தாய்மொழியின் தசைகளைத் தின்னுகின்றன

உலக தேசிய இனங்கள் விழிப்போடிருக்கவேண்டிய வேளை இது

அரசு ஆசிரியர் பெற்றோர் மாணவர் ஊடகம் என்ற ஐம்பெரும் கூட்டணிகளால் மட்டுமே இந்தப் பன்னாட்டுப் படையெடுப்பைத் தடுக்கமுடியும்

சரித்திரத்தின் பூகோளத்தின் ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்

எங்கள் தாய்மொழி எங்கள் அடையாளம் மற்றும் அதிகாரம்” என கவிஞர் வைரமுத்து உலகத் தாய்மொழித் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post “எங்கள் தாய்மொழி – எங்கள் அடையாளம் – அதிகாரம்” – கவிஞர் வைரமுத்து தாய்மொழி தின வாழ்த்து! appeared first on Dinakaran.

Related Stories: