ஊரக திறனாய்வுத் தேர்வு சாத்தான்குளம் மாணவர்கள் வெற்றி

சாத்தான்குளம், பிப். 21:ஊரக திறனாய்வுத் தேர்வில் சாத்தான்குளம் மாரியம்மன் இந்து மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த கல்வியாண்டில் நடந்த ஊரக திறனாய்வுத் தேர்வில் சாத்தான்குளம் மாரியம்மன் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிரமிளா, அன்புசெல்வம், அபிராம்சவுதேஸ் ஆகியோர் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு தமிழக அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது, வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி ஆசிரியர்களையும் பள்ளி தலைவர் அற்புதராஜ், பள்ளி செயலர் குமரகுருபரன், துணை தலைவர் சங்கர், துணை செயலர் மகேஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

The post ஊரக திறனாய்வுத் தேர்வு சாத்தான்குளம் மாணவர்கள் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: