சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அந்தமான் சிறையில் ஜனாதிபதி மரியாதை

போர்ட்பிளேர்: அந்தமான் – நிக்கோபார் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, செல்லுலார் சிறைக்குச் சென்று அங்குள்ள தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கு சென்றார். அவர் தலைநகர் போர்ட் பிளேயரில் அமைந்துள்ள செல்லுலார் சிறைக்குச் சென்று அங்குள்ள தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அங்கு வைக்கப்பட்டுள்ள ‘ஸ்வந்தந்த்ராய ஜ்யோத்’ என்ற சுடரையும் பார்வையிட்டார். செல்லுலார் சிறையில் நடந்த ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியையும் பார்த்தார். தொடர்ந்து, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய ஜனாதிபதி, ‘அந்தமான் நிக்கோபார் தீவுகளானது நாட்டின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைப்பதில் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இயற்கை அழகானது உலக மக்களை ஈர்க்கிறது. அந்தமான் – நிக்கோபார் தீவுகளைச் சுற்றியுள்ள பிரத்தியேக பொருளாதார மண்டலமானது நாட்டின் மொத்த பொருளாதார மண்டலங்களில் சுமார் 30 சதவீதத்தைக் கொண்
டுள்ளது’ என்றார்.

The post சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அந்தமான் சிறையில் ஜனாதிபதி மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: