செம்பரம்பாக்கம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் திறப்பு: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பங்கேற்பு

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.28 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் முழுமையாக பூர்த்தியடைந்தது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிலையில் 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி வின்சென்ட் அனைவரையும் வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார், ஒன்றிய ஆணையர் க.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவிற்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் திமுக பொதுக்குழு உறுப்பினர் வி.குமார், ஒன்றிய நிர்வாகிகள் ஏ.ஜனார்த்தனன், எஸ்.புகழேந்தி, ஏ.ஆர்.பாஸ்கர், ஒன்றியக் குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, ஒன்றிய கவுன்சிலர் பிரியா செல்வம், ஊராட்சி துணைத் தலைவர் கன்னியம்மாள் ருத்ரகுமார் மற்றும் கிளை செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post செம்பரம்பாக்கம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் திறப்பு: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: