பார்கள், கிளப்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் கட்டாயம்: தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

டெல்லி: நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பொழுதுபோக்கு கிளப்புகள், நட்சத்திர விடுதிகள், டாஸ்மாக் பார்கள் முதன்முறையாக இந்திய தேர்தல் ஆணையத்தின் ரேடாரின் கீழ் வரவுள்ளன. டாஸ்மாக் பார்கள் மற்றும் FL2 மற்றும் FL3 உரிமம் வைத்திருப்பவர்கள் சிசிடிவி கேமரா பொருத்தி இருப்பதை உறுதி செய்ய மதுவிலக்கு மற்றும் கலால் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 90 சதவீத டாஸ்மாக் பார்களில் ஏற்கனவே சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ‘அதிக மதுபாட்டில்கள் வைத்திருப்பவர்களை பிடிபடும் போது சிசிடிவி கேமராக்கள் மூலம் , மதுபானம் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பதை எளிதாக கண்டுபிடிக்க தேர்தல் கமிஷன் பறக்கும்படையினருக்கு உதவும், என, தெரிவித்தார்.

தேர்தல்களுக்கு முன்னதாக ECI அத்தகைய அறிவுறுத்தல்களை வழங்குவது வழக்கம் தான் என்றும் ஆனால் FL2 உரிமம் வைத்திருப்பவர்கள் (பொழுதுபோக்கு கிளப்புகள்) மற்றும் FL3 (ஹோட்டல்கள்) முதல் முறையாக கண்காணிப்பு வளையத்திற்கு வரவுள்ளன

தமிழ்நாடு முழுவதும் உள்ள கிளப்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் 125 இல் இருந்து 448 ஆக உயர்ந்துள்ளது, சென்னை மாவட்டத்தில் மட்டும் 104 பொழுதுபோக்கு கிளப்புகள் உள்ளன.
பொழுதுபோக்கு கிளப்புகளின் நேரம் காலை 11 மணி முதல். இரவு 11 மணி முதல், டாஸ்மாக் கடைகளும், பார்களும் மதியம் முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றன.

மக்களவைத் தேர்தலின் போது சர்ச்சைகள் ஏற்பட வாய்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும். பார்களில் கேமராக்கள் பொருத்தப்பட்ட பின் அதற்கான புகைப்படங்களையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தத் தவறும் பட்சத்தில் டாஸ்மாக் பார்களின் ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு மதுவிலக்குத்துறை ஆணையாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பார்கள், கிளப்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் கட்டாயம்: தேர்தல் ஆணையம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: