காலை உணவு திட்டம் விரிவாக்கம்.. ரூ.600 கோடி ஒதுக்கீடு

சென்னை: முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை மேலும் 2.50 லட்சம் மாணவர்களுக்கு விரிவுபடுத்த 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ 3123 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.1000 கோடியில் தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் -மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்படும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவுப்படுத்த ரூ.360 கோடி செய்யப்பட்டுள்ளது.

The post காலை உணவு திட்டம் விரிவாக்கம்.. ரூ.600 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: