வரதாச்சாரியார் பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

மயிலாடுதுறை வரதாச்சாரியார் பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் காலை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வரத்து இல்லாததால் கொள்ளிடம் ஆற்றில் நீர்ஊற்று குறைவானதால் குடிநீர் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து வரும் கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்படாமல் சமாளிக்கும் பொருட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் வரதாச்சாரிய பூங்காவில் 500 அடி ஆழத்திற்கு புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி பூமிபூஜையுடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் சிவகுமார், கவுன்சிலர்கள் ஆனந்தன், முன்னாள் கவுன்சிலர்கள் ரகு, மாசிலாமணி உட்பட பலர் இருந்தனர்.

The post வரதாச்சாரியார் பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: