என்ன செய்தார் என்றே மோடிக்கு தெரியல: மாணிக்கம் தாகூர் ‘கலாய்’

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அமைப்புரீதியாக சில மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக மாநில தலைமை மாற்றப்பட்டுள்ளது. புதிய தலைவர் செல்வப்பெருந்தகைக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு. அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என மோடி கூறியுள்ளார். அவரை பொறுத்தவரை என்ன செய்தேன் என்று மக்களிடம் கூற முடியாமல், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சிறு குறு தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை ஏமாற்றி வாக்குகளை பெற்றார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் வெற்றி பெறப்போவதாக வட இந்திய ஊடகங்கள் உதவியுடன் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். பாஜவினர் பிரச்னைகளை மறைத்துவிட்டு, மதத்தின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என மக்களை திசை திருப்புகின்றனர். இவ்வாறு கூறினார்.

 

The post என்ன செய்தார் என்றே மோடிக்கு தெரியல: மாணிக்கம் தாகூர் ‘கலாய்’ appeared first on Dinakaran.

Related Stories: