ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மநீம கடும் எதிர்ப்பு: பொதுக்குழுவில் தீர்மானம்


சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்: ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாண்புமிக்க ஜனநாயகத்தை மண் கொண்டு புதைக்கும் செயல். பல்வேறு கலாச்சாரங்களும், நம்பிக்கைகளும், பருவ காலங்களும், நில அமைப்பும் கொண்ட பன்மைத்துவ தேசத்தின் ஜனநாயகத்தை ஒற்றை கட்சியின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரும் இந்த முயற்சியை பன்மைத்துவத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட ஜனநாயகத்தின் காவல் வீரர்களான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல.தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப்பகிர்வை அரசியலாக்கி, விவாதப்பொருளாக்கி தமிழ்நாட்டு மக்களைத் தண்டிக்கும் போக்கை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில் துணைத்தலைவர் மவுரியா உள்ளிட்ட தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மநீம கடும் எதிர்ப்பு: பொதுக்குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: