எங்களுக்கே அந்த விழிப்புணர்வு இருக்கும்போது நூற்றாண்டுகளை கடந்த காங்கிரஸ் கட்சிக்கு தெரியாதது அல்ல. கம்யூனிஸ்ட் கட்சியும் தெரியாதவர்கள் அல்ல. எனவே எந்த நேரத்தில் எதை கேட்க வேண்டும், எப்படி கேட்க வேண்டும், அதற்கான காலம் கனிந்திருக்கிறதா, இதையெல்லாம் அறிந்தவர்கள் தான் திமுக கூட்டணியில் இருக்கின்றோம். பாஜவினரால் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியவில்லை. திமுக, அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அதன் ஆற்றாமையால், இயலாமையால் பாஜவினர் திமுகவை குறை சொல்லி புலம்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஆட்சியில் பங்கு கேட்கும் சூழலே எழவில்லை: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.