கடலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி: சென்னை தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்பு

கடலூர்: அகில இந்திய சுன்சுகான் இஷி்ன்ரியூ கராத்தே பள்ளி சார்பில் 9வது மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இன்று நடந்தது. கடலுார் அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிக்கு சுன்சுகான் இஷி்ன்ரியூ கராத்தே பள்ளி தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பயிற்சியாளர்கள் செல்லபாண்டியன், சுதாகர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் கடலுார் லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், போட்டியை துவக்கி வைத்தார்.

கவுரவ விருந்தினராக அரி்ஸ்டோ பள்ளி சேர்மன் சிவக்குமார் பங்கேற்றார். அரிஸ்டோ பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே, ஏ.ஜே.பள்ளி முதல்வர் ரங்கநாதன், சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் உதயகுமார் சாம், எக்விடாஸ் மெட்ரி்க் பள்ளி முதல்வர் சசிகலா வாழ்த்திப் பேசினர்.

போட்டியில், சென்னை, கடலுார், தஞ்சாவூர், நாகை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மயிலாடுதுறை, விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 6 வயது முதல், 21 வயதுக்குட்பட்ட 750 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். யோகா பயிற்சியாளர் விஜய வல்லவன் நன்றி கூறினார்.

The post கடலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி: சென்னை தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: