லோயர் பஜார் சாலையில் 5 இடங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரம்

 

ஊட்டி, பிப்.18: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தற்போது சாலை சீரமைப்பு பணிகள், கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி லோயர்பஜார் பகுதியில் மழைக்காலங்களில் கழிவு மழை நீர் தேங்குவது மற்றும் கழிவு நீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், இப்பகுதி மக்கள் பாதாள சாக்கடை அமைத்து கழிவு நீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது ஊட்டி லோயர் பஜார் சாலையில் ஐந்து இடங்களில் சாலையின் குறுக்கே கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகள் முடிந்தவுடன், இச்சாலை சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறை துவக்கவுள்ளது. இதனால், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. கோடை சீசன் துவங்கும் முன் இப்பணிகள் முடிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post லோயர் பஜார் சாலையில் 5 இடங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: