பந்தலூர் கருமாரியம்மன் கோவில் திருவிழா பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பந்தலூர்,மே12: பந்தலூர் கருமாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டம்,பந்தலூர் அம்பேத்கர் நகரில் உள்ள கருமாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.கணபதி ஹோமம் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து ஆற்றங்கரைக்கு சென்று அம்மனை குடியழைத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. நேற்று காலை சிறப்பு பூஜைகளுடன் விரதம் இருந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.பக்தர்களின் பால் குட ஊர்வலம் பந்தலூர் பஜாரில் துவங்கி புதிய பேருந்து நிலையம் வரை சென்று கோவிலை சென்றடைந்தது.

தொடர்ந்து மதியம் அன்னதானம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் திருத்தேர் பவனி நடைபெற்றது. இன்று காலை மாவிளக்கு பூஜை மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post பந்தலூர் கருமாரியம்மன் கோவில் திருவிழா பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: