10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நீலகிரி மாவட்டம் 90.61 சதவீத தேர்ச்சி

கூடலூர்,மே11: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் த சில்ரன் ஆகிவை சார்பில் நடைபெற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தொழில் பயிற்சி மைய முதல்வர் ஷாஜி எம்.ஜார்ஜ் தலைமை வகித்தார்.ஆல்த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித்,கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய துணைத்தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசுகையில்:எரிசக்தி உற்பத்தி என்பது பெருமளவு பாதிப்பு அடைந்து வருகிறது. இயற்கை வளம் பாதிப்பு,நிலக்கரி,யுரேனியம் உள்ளிட்ட மூலப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.மேலும் மின் உற்பத்தி முறைகளினால் வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்படுகிறது.இதனைத் தவிர்க்க பாதிப்பு ஏற்படாத வகையில் உள்ள மின்சக்திகளை உருவாக்கிக் கொள்ளுதல் அவசியம் ஆகிறது.

அதற்கு சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின்உற்பத்தி மூலமாக மின் உற்பத்தியை உருவாக்கிக் கொள்ளுதல் அவசியமாகிறது.சோலார் மூலம் கிணறுகளில் நீர்இறைக்கும் இயந்திரம்,தெரு விளக்கு,சோலார் மின் வேலிகள்,வீடுகளின் மின் தேவைகளுக்கு மின்சாரம் பெற முடியும்.காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.மாணவர்கள் மத்தியில் சோலார் மின் உற்பத்தியை அதிகப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,சோலார் மூலம் புதிய உற்பத்தி சாதனங்களை கண்டறிவதற்கு முயற்சிக்க வேண்டும்.அதுபோல சாண எரிவாயு, வீடுகளில் உள்ள காய்கறி உள்ளிட்ட கழிவுகள் மூலமும் எரிவாயு உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்றார்.கருத்தரங்கில் தொழிற் பயிற்சி மைய ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் செட்டிவயல் பகுதியிலும் பொதுமக்களிடம் சோலார் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நீலகிரி மாவட்டம் 90.61 சதவீத தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: