குந்தை சீமை படுகர் நலச்சங்கம் சார்பில் மஞ்சூரில் இன்று படுகர் தின விழா கொண்டாட்டம்

மஞ்சூர், மே 15: குந்தை சீமை நலச்சங்கத்தின் சார்பில் மஞ்சூரில் இன்று (15ம் தேதி) படுகர் தின விழா கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டம், குந்தை சீமை படுகர் நல சங்கத்தலைவர் சந்திரன் கூறியதாவது: குந்மை சீமை நல சங்கத்தின் சார்பில் இரண்டாம் ஆண்டு படுகர் தின விழா இன்று (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு காலை 11 மணியளவில் மஞ்சூர் ஹெத்தையம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து அன்னமலை முருகன் கோயில் மண்டபத்தில் குந்தை சீமை பார்ப்பத்தி மாதாகவுடர், நலச்சங்க தலைவர் சந்திரன் மற்றும் குந்தை சீமைக்கு உட்பட்ட ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சமுதாய முன்னேற்றம் தொடர்பான கருத்தரங்கு, சொற்பொழிவு நடைபெறும் மேலும் மாணவ, மாணவிகள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கலாச்சார கலை நிகழ்ச்சிகள், ஆடல், பாடல், இன்னிசை கச்சேரி, விருந்து உபசரிப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெறுகிறது. எனவே சமுதாய எழுச்சி, கலாச்சாரம், பண்பாடு, ஒற்றுமை காக்க நடைபெறும் படுகர் தின விழாவில் குந்தை சீமையை சேர்ந்த சமுதாய மக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post குந்தை சீமை படுகர் நலச்சங்கம் சார்பில் மஞ்சூரில் இன்று படுகர் தின விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: