மெஞ்ஞானபுரம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் குடும்ப கூடுகை விழா

உடன்குடி,பிப்.18: மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளியில் 1979ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் சந்திக்கும் குடும்ப கூடுகை விழா பள்ளித் தாளாளர் ஜான்ஸ்டீபன் தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் கான்ஸ்டன்டைன் வரவேற்றார். பள்ளி பழைய மாணவர் சங்கத்தலைவர் தேவபிச்சை, செயலாளர் நவமணிராபர்ட் முன்னிலை வகித்தனர். விழாவில் பங்கேற்ற பழைய மாணவர்கள் தங்களுடன் படித்த நண்பர்களை கண்டதும் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் தங்களது பள்ளிகால நினைவுகளை அசைபோட்டனர். தொடர்ந்து பழைய மாணவர்கள் தங்களது குடும்பத்திரை தங்கள் பயின்ற வகுப்பறைகள், ஆசிரியர் கண்டித்தஇடங்கள், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களை நேரில் காட்டி மகிழ்ந்தனர். இதையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை வசந்தமோகன், டேனியல், மனோகர், இமானுவேல், மார்ட்டின் ஜெயராஜ், சுந்தர், இம்மானுவேல்அருள்தம்பி, ஜோசப் ராஜா செய்திருந்தனர்.

The post மெஞ்ஞானபுரம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் குடும்ப கூடுகை விழா appeared first on Dinakaran.

Related Stories: