ெதன்காசி அருகே பெரியபிள்ளை வலசையில் ரூ.30 லட்சத்தில் நீர்த்தேக்க தொட்டி ஊராட்சி தலைவர் திறந்து வைத்தார்

தென்காசி, பிப். 18: பெரியபிள்ளை வலசை ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ெபாதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. தென்காசி அருகே பெரியபிள்ளை வலசை ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பெரியபிள்ளை வலசை ஊராட்சி தலைவர் வேல்சாமி தலைமை வகித்து குடிநீர் விநியோகத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் நத்தடு அம்மாள், உறுப்பினர்கள் சாந்தி, முத்துக்குமார், மணிகண்டன், ராம்குமார், பாலா, சந்தனகுமார், உதயகுமார், ஈஸ்வரி, ஒப்பந்ததாரர் ராம்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் செல்லப்பா நன்றி கூறினார்.

The post ெதன்காசி அருகே பெரியபிள்ளை வலசையில் ரூ.30 லட்சத்தில் நீர்த்தேக்க தொட்டி ஊராட்சி தலைவர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: