ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்: ரஷ்ய அதிபர் புடின் அறிவுறுத்தல்

ரஷ்யா: ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென அந்நாட்டு அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யாவில் மக்கள்தொகை குறைந்து வரும் நிலையில், ஒரு தம்பதி குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டுமென அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில், ரஷ்ய இராணுவம் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்த நிலையில், போரினால் ஏராளமான ரஷ்யர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அதிகளவான மக்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளதாகவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஒரு தேசமாக வாழ, ஒரு குடும்பத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகளாவது இருக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் கூறியுள்ளார். குடும்பத்துக்கு ஒரு குழந்தை இருந்தால், ரஷ்யாவின் ஜனத்தொகை குறையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யாவில் உள்ள தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென விளாடிமீர் புடின் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, கடந்த 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ரஷ்யாவின் ஜனத்தொகை 146.4 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

The post ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்: ரஷ்ய அதிபர் புடின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: