அரிமளம் அருகே முத்தையா சுவாமி கோயில் மாசி திருவிழா

திருமயம்: அரிமளம் அருகே முத்தையா சுவாமி கோயில் மாசி திருவிழா காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில் முத்தையா சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாசி திருவிழா அப்பகுதி பக்தர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான மாசித் திருவிழா கடந்த 15ம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்கி அன்று இரவு மயில்வாகன திருவீதி உலா நடைபெற்றது. காப்பு கட்டுயதிலிருந்து 11 நாட்கள் நடைபெறும். முத்தையா சுவாமி மாசி திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சி மற்றும் சுவாமியின் பல்வேறு வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும். இந்நிலையில் விழாவின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா எதிர்வரும் 23ம் தேதி 9ம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 25ம் தேதி நடைபெறும் 10ம் திருவிழாவுடன் காப்பு அகற்றப்பட்டு விழா முடிவுக்கு வருகிறது.

The post அரிமளம் அருகே முத்தையா சுவாமி கோயில் மாசி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: