ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

 

ஊட்டி, பிப். 16: சிஐடியு ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. சங்க தலைவர் ஆபிரகாம் தலைமை வகித்தார். செயலாளர் மூர்த்தி, கௌரவ தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் வினோத், சிஐடியு மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்.

இதில், ‘ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை உடனே தொடங்க வேண்டும். ஜனவரி மாத ஊதியத்தை வழங்க வேண்டும். முழு ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். காலதாமதம் இன்றி உடனே பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஊட்டி ஆர்டிஒ மகராஜ், தாசில்தார் சரவணகுமார் ஆகியோர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள், ராஜரத்தினம் புஷ்பராஜ், டேவிட், நூர் முகமது, சரவணன் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் அன்பரசு நன்றி கூறினார்.

The post ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: