ஊட்டியில் ஆளுநர் 3 நாள் முகாம்

ஊட்டி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக நேற்று மாலை 6 மணியளவில் ஊட்டி சென்றார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு வந்த அவரை மாவட்ட கலெக்டர் அருணா, மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் ஆகியோர் வரவேற்றனர். இன்று காலை ஊட்டி அருகேயுள்ள முத்தநாடு மந்து தோடர் பழங்குடியின கிராமத்திற்கு ெசல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி பழங்குடியின மக்களை சந்தித்து உரையாடுகிறார்.
இதுதவிர, வேறு சில நிகழ்ச்சிகளில் ஆளுநர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. வரும் 18ம் தேதி சென்னை திரும்புகிறார். சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் தேசிய கீதம் வாசிக்கும் முன்னரே வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட கூடும் என்பதால் சுமார் 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு ஊட்டி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post ஊட்டியில் ஆளுநர் 3 நாள் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: