நாகர்கோவில் ஜங்சன் ரயில் நிலையம் அருகே ஊட்டுவாழ்மடம் செல்லும் சுரங்கபாதை அமைக்கும் பணி தீவிரம்

நாகர்கோவில்: நாகர்கோவில் ஜங்சன், டவுன் ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. டவுன் ரயில் நிலையத்தில் 3 தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பிளாட்பாரங்கள் உயரம் கூட்டப்பட்டு, பயணிகள் நிழற்கூடைகள், பிரமாண்டான நுழைவாயில் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதுபோல் நாகர்கோவில் ஜங்சன் ரயில் நிலையத்திலும் தண்டவாளங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

பிளாட்பாரத்தில் உள்ள நிழற்குடைகளை அகற்றப்பட்டு புதிய நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. லிப்ட் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் ஜங்சன் ரயில் நிலையத்திற்கும் பைபாஸ் பாதை பிரியும் இடத்திற்கும் இடையே ஊட்டுவாழ்மடத்திற்கு செல்லும் பாதை உள்ளது. மீனாட்சிபுரத்தில் இருந்து ஊட்டுவாழ்மடம், இலுப்பை அடிகாலனி உள்பட பல்வேறு கிராமங்களுக்கும், மேலும் அங்குள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல இந்த தண்டவாளத்தை கடந்துதான் செல்லவேண்டும். ஜங்சன் ரயில் நிலையம் அருகே இருப்பதால் அடிக்கடி ரயில்கள் வந்து செல்வதால், அதிக நேரம் ரயில்வே கேட் அடைக்கப்பட்டு இருக்கும்.

இதனால் அந்த வழியாக செல்லும் ெபாதுமக்கள், விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனை தொடர்ந்து மேம்பாலம் அல்லது சுரங்கபாதை அமைக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து சுரங்கபாதை அமைக்கும் பணி அங்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு தொடங்கியது. கிழக்கு பகுதியில் காங்கிரீட் அமைக்கப்பட்டு சுரங்கப்பாதை முடிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு பகுதியில் தற்போது காங்கிரீட் போடுவதற்காக கம்பி கட்டும் பணி நடந்து வருகிறது. சுரங்கபாதை பணியை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

The post நாகர்கோவில் ஜங்சன் ரயில் நிலையம் அருகே ஊட்டுவாழ்மடம் செல்லும் சுரங்கபாதை அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: