211 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து: டேன் பியட் அபார பந்துவீச்சு

ஹாமில்டன்: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 211 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. செடான் பார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா, முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்திருந்தது. டி ஸ்வார்ட் 55 ரன், வோன் பெர்க் 34 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். வோன் பெர்க் 38 ரன், டேன் பியட் 4 ரன்னில் வெளியேற, டி ஸ்வார்ட் 64 ரன் (156 பந்து, 9 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்ப, டேன் பேட்டர்சன் கோல்டன் டக் அவுட் ஆனார். தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன் எடுத்து (97.2 ஓவர்) அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.

நியூசிலாந்து பந்துவீச்சில் புதுமுகம் வில்லியம் ஓரூர்கி 4, ரச்சின் 3, ஹென்றி, சவுத்தீ, நீல் வேக்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, அடுத்துடுத்து விக்கெட் சரிந்ததால் 77.3 ஓவரில் 211 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வில்லியம்சன் 43, லாதம் 40, வில் யங் 36, வேக்னர் 33, ரச்சின் 29 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் டேன் பியட் 32.3 ஓவரில் 5 மெய்டன் உள்பட 89 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். டேன் பேட்டர்சன் 3, ஷெபோ மோரெகி 1 விக்கெட் எடுத்தனர். 3ம் நாளான இன்று தென் ஆப்ரிக்கா 31 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடுகிறது.

The post 211 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து: டேன் பியட் அபார பந்துவீச்சு appeared first on Dinakaran.

Related Stories: