யானை மீது அம்மன் திருவீதி உலா சிறப்பு வரி வசூல் முகாமில் ரூ.2.98 லட்சம் வசூல்

 

கூடலூர் பிப்.14: கூடலூர் நகராட்சி சார்பில் நேற்று நடத்தப்பட்ட சிறப்பு வரி வசூல் முகாமில் ஒரே நாளில் ரூ.2.98 லட்சம் வசூலானது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 2023-24ம் ஆண்டிற்கான நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக செலுத்தி ரசீது மற்றும் உரிமங்கள் பெற்றுக் கொள்வதற்கான சிறப்பு முகாம் கள்ளிக்கோட்டை சாலை ஜானகி அம்மாள் அரங்கில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் 150 பேர் செலுத்திய சொத்துவரி மூலம் ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 329, 82 பேர் செலுத்திய குடிநீர் வரி மூலம் ரூ.49 ஆயிரத்து 200, தொழில் வரி செலுத்தி உரிமம் பெற்ற 124 பேர் மூலம் ரூ.69 ஆயிரத்து 300 என மொத்தம் 2.98 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

The post யானை மீது அம்மன் திருவீதி உலா சிறப்பு வரி வசூல் முகாமில் ரூ.2.98 லட்சம் வசூல் appeared first on Dinakaran.

Related Stories: