நியூசிலாந்து தென் ஆப்ரிக்கா 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்

ஹாமில்டன்: நியூசிலாந்து – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30க்கு தொடங்கி நடைபெறுகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. மவுன்ட் மவுங்கானுயி மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து 281 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அந்த போட்டியில் கேன் வில்லியம்சன் 2 இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்தினார் (118 & 109). ரச்சின் ரவிந்திரா 240 ரன் விளாசினார். நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் ஹாமில்டனில் இன்று தொடங்குகிறது. தொடரை வெல்ல நியூசிலாந்தும், பதிலடி கொடுத்து சமன் செய்ய தென் ஆப்ரிக்காவும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. எனினும், அதிக அனுபவம் இல்லாத வீரர்களுடன் களமிறங்கியுள்ள தென் ஆப்ரிக்க அணி பலம் வாய்ந்த நியூசிலாந்துக்கு ஈடு கொடுப்பது கேள்விக்குறி தான். வில்லியம்சன் ஹாட்ரிக் சதம் அடிப்பாரா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நியூசிலாந்து தென் ஆப்ரிக்கா 2வது டெஸ்ட் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: