உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு: திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் வரும் 14, 15ம் தேதி நடைபெறும்

சென்னை: திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆற்றிய கழக பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட வாரியாக எனது தலைமையில் மாநில துணைச்செயலாளர்கள் முன்னிலையில் குறிஞ்சி இல்லத்தில் வரும் 14,15ம் தேதிகளில் நடைபெறும்.

இதில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பராமரித்து வரும் மினிட் புத்தகம், கழக பணிகள் குறித்த பத்திரிக்கை செய்திகள், புகைப்படங்களுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் 14ம் தேதி மண்டலம் -1ல் மாலை 4 மணி முதல் 6 மணி வரை, மண்லடம் – 2ல் 6 மணி முதல் 8 மணி வரையும், 15ம் தேதி மண்லடம் – 3ல் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும், மண்டலம் – 4ல் மாலை 6 மணி முதல் 8 வரையும் கூட்டம் நடைபெறும்.

The post உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு: திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் வரும் 14, 15ம் தேதி நடைபெறும் appeared first on Dinakaran.

Related Stories: