கலைஞர் நூற்றாண்டு விழா பந்தலூரில் கால்பந்து போட்டி துவக்கம்

 

பந்தலூர்,பிப்.11:பந்தலூரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு கால்பந்து போட்டிக்கான துவக்கவிழா நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் பந்தலூரில் நவபாரத ஆர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக எஸ்எப்ஏ அங்கீகாரம் பெற்ற அகில இந்திய மின்னொளி காலப்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது. கலைஞர் நினைவு கோப்பைக்கான இப்போட்டிகள் நடைபெறுவதற்கான கேலரி அமைப்பதற்கான துவக்கவிழா பந்தலூர் பொதுமைதானத்தில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏவும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான திராவிடமணி பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம் முன்னிலை வகித்தார்,இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் முரளிதரன்,மாவட்ட பிரதிநி சந்திரபோஸ், நகர மன்ற உறுப்பினர் சாந்தி புவனேஸ்வரன் மற்றும் ஜபருல்லா அஸப் ஜா,மைக்கேல் ஜோசப், ரியாஸ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விளையாட்டு போட்டிக்கள் 17ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெறும். கால்பந்து விளையாட்டில் வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசுகளை நீலகிரி எம்பி ஆ.ராசா வழங்க உள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா பந்தலூரில் கால்பந்து போட்டி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: