கும்மிடிப்பூண்டி அருகே அரசுப்பள்ளியில் முப்பெரும் விழா: எம்எல்ஏ பங்கேற்பு


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல் பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா, காலை உணவு சமையல் அறை திறப்பு விழா, பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. சிறுபுழல்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுசிலா மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் அனுபாரதி வரவேற்றார். கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவகுமார், துணை தலைவர் மாலதி குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், ஊராட்சி துணைத் தலைவர் வெற்றிவேந்தன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிபாலன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், முன்னாள் தலைவர்கள் குமார், ஆறுமுகம், மற்றும் ஊர் நிர்வாகிகள் இம்மானுவேல், வேதமுத்து, காசி, குமரவேல், ஜெயமணி, ஆட்டோ குமார், பழனி, பள்ளி விளையாட்டு ஆசிரியர் ராஜபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன், தமிழக அரசின் காலை உணவு திட்ட சமையல் அறையை திறந்து வைத்தார். பிறகு 6.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கத்தை திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், தற்காப்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.விழாவில், விளையாட்டிலும், கல்வியிலும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பேசினார். அவர் பேசும் போது, படிக்கும் காலத்தில் மாணவர்கள் எதிர்கால இலக்கை நிர்ணயித்து படிக்கும்போது வாழ்க்கை உயர்வடையும் என்று கூறியவர், பெற்றோர்களின் கோரிக்கைக்கு இணங்க பள்ளி விரைவில் தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப்பள்ளியாக மாறும் என உறுதி அளித்தார். நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் பல்வேறு கட்சியினர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே அரசுப்பள்ளியில் முப்பெரும் விழா: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: