சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை செப்.30 வரை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறை செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது. இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது குறித்து நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என சென்னை ஐ.ஐ.டி., பெங்களூரு பெங்களூரு ஐ.ஐ.எம் ஆய்வு செய்துள்ளதாகவும், இ-பாஸ் முறையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை செப்.30 வரை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: