எழுத்தர் கிங்ஸ்டன் வரவேற்றார். பேரூராட்சியில் பணிபுரியும் சுகாதாரப்பணியாளர் அனைவருக்கும் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ அலுவலர் ரைசா மருத்துவ சிகிச்சை அளித்தார். சுகாதாரப்பணியாளர்கள் சுகாதாரமான முறையில் கழிவுகளை அகற்ற ஆலோசனை வழங்கப்பட்டது. எப்போதும் பணி செய்யும் போது கிளவுஸ் கையுறைகள் அணிந்து பாதுகாப்பாக பணி செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது. குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் கிராம சுகாதார செவிலியர் பெர்னத், சுகாதார ஆய்வாளர் அருண், பெண் சுகாதார தன்னார்வலர் பணியாளர்கள் சுதா, பாத்திமா, பொன்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் நன்றி கூறினார்.
The post சுகாதார பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.
