‘விவசாயிகளை வறுமையில் இருந்து மீட்க கூடுதல் நடவடிக்கை தேவை’

புதுடெல்லி: இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் 62வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “விவசாயிகள் உணவு தருபவர்கள் மட்டுமல்ல. நமக்கு உயிர் தருபவர்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது முக்கியம். இன்றும் பல விவசாயிகள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கவும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யவும் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

The post ‘விவசாயிகளை வறுமையில் இருந்து மீட்க கூடுதல் நடவடிக்கை தேவை’ appeared first on Dinakaran.

Related Stories: