சேலத்தில் 9 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பீட்டிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை

சென்னை: சேலம் மாவட்டத்தில் 9 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பீட்டிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு இந்து சமய அறநிலையத்துறை துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின்பகட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமானhசொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் 9 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.120 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தெசவிளக்கு வடக்கு மற்றும் தெற்கு கிராமங்களில் அமைந்துள்ள அருள்மிகு உலகேஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு படவெட்டியம்மன் திருக்கோயில், அருள்மிகு சென்றாயப் பெருமாள் திருக்கோயில், அருள்மிகு காட்டுசென்றாயப் பெருமாள் திருக்கோயில், வெள்ளக்கல்பட்டி அருள்மிகு சென்றாயப் பெருமாள் திருக்கோயில், அருள்மிகு அணை முனியப்பன் திருக்கோயில், அருள்மிகு தெசவிளக்கு மாரியம்மன் திருக்கோயில், அருள்மிகு அணை விநாயகர் திருக்கோயில், அருள்மிகு துட்டம்பட்டி மாரியம்மன் திருக்கோயில் ஆகிய 9 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 119 ஏக்கர் 71 சென்ட் விவசாய நிலங்களை பல ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த 36 நபர்கள் ஆக்கிரமித்து திருக்கோயில்களுக்கு எவ்வித குத்தகை தொகையும் செலுத்தாமல் நீண்ட நாட்களாக விவசாயம் செய்து வந்தனர்.

சேலம் மண்டல இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படி சட்டப்பிரிவு 78-ன் கீழ் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சேலம் மண்டல உதவி ஆணையர் கே.ராஜா அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.120 கோடியாகும்.

The post சேலத்தில் 9 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பீட்டிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: