கோத்தகிரியில் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்

 

ஊட்டி,பிப்.9: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு தோட்டக்கலை துணை இயக்குநர் அப்ரோஸ்பேகம் தலைமை வகித்து,அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஐஸ்வர்யா தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து பேசினார்.

வேளாண் சகோதர துறைகளான கால்நடை பராமரிப்புதுறை, மீன்வளத்துறை மற்றும் பட்டு வளர்ச்சி துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு மானிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இயற்கை வேளாண்மையில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து விளக்கினார்.

நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இயற்கை விவசாயிகள் சங்க துணை தலைவர் கணேசன்,இயற்கை வேளாண்மையில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து பேசினார். இதில் முன்னோடி விவசாயிகளுக்கு அடுத்த நிதியாண்டில் பெற வேண்டிய பயிற்சிகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.முன்னதா தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் வரவேற்றார். முடிவில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் நன்றி கூறினார்.

The post கோத்தகிரியில் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: