புதுக்கோட்டையில் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பரிசு

 

புதுக்கோட்டை, பிப். 9: இந்திய அஞ்சல் துறை சார்பில், திருச்சி மத்திய மண்டல அளவிலான மெகா முதலீடு மேளா கடந்த மாதம் 16ம் தேதி முதல் இம்மாதம் 3ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பங்குபெற்று முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ரூ.2 லட்சம் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் பிரிவில் புதுக்கோட்டை அன்னவாசல் துணை அஞ்சலகத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த திருமதி ஜமாலம்மாள் என்பவருக்கு ரூ. 2300/- மதிப்புள்ள மேஜை மின்விசிறியும், ரூ.50000 – 100000 வரையிலான முதலீட்டாளர்கள் பிரிவில் புதுக்கோட்டை பெருஞ்சுனை கிளை அஞ்சலகத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த நதியா என்பவருக்கு ரூ. 1640/- மதிப்புள்ள இண்டக்சன் அடுப்பும் பரிசாக வழங்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் இதுபோல அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் கணக்குகளைத் துவங்கி பயன்பெற வேண்டும் என்று புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் கேட்டுக்கொண்டார்.

The post புதுக்கோட்டையில் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories: