இரும்பாலை அருகே மாரியம்மன் கோயில் விழாவில் வினோத மாவிளக்கு ஊர்வலம்

இளம்பிள்ளை: சேலம் இரும்பாலை அருகே கீரைப்பாப்பம்பாடி பகுதியில் பாப்பார மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தை பொங்கல் பண்டிகையின் கரிநாளன்று எருதாட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த எருதாட்டத்தின் போது கோயிலில் வாக்கு கேட்கப்படும். அதில் வாக்கு கிடைத்தால் தான் தை மாதத்தில் கோயிலில் திருவிழா நடைபெறும். அவ்வாறு நடைபெறும் விழாவில் கீரைப்பாப்பம்பாடி, ஓலைப்பட்டி, காட்டூர், புதூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் ஆள் உயர மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.

கடந்த 7 ஆண்டுகளாக கோயிலில் வாக்கு கிடைக்காத தால் திருவிழா நடைபெறாமல் இருந்தது.இந்நிலையில் இந்த ஆண்டு கரிநாள் அன்று வாக்கு கிடைத்ததையொட்டி தற்போது திருவிழா நடந்து வருகிறது. இதை யொட்டி இன்று 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீரைபாப்பம்பட்டி பாப்பாரமாரியம்மன் கோயிலில் இருந்து ஓலைப்பட்டியில் உள்ள அம்மன் கோயில் வரை ஆள் உயர மாவிளக்கு தட்டம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அங்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் ஓலைப்பட்டியில் இருந்து அதே போல் மாவிளக்கு எடுத்து பாப்பார மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

The post இரும்பாலை அருகே மாரியம்மன் கோயில் விழாவில் வினோத மாவிளக்கு ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: