சில்லி பாயிண்ட்

* பிரைம் வாலிபால் லீக் (பிவிஎல்) போட்டியின் 3வது தொடர் பிப்.15 – மார்ச் 21 வரை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. சென்னை பிளிட்ஸ் உட்பட மொத்தம் 9 அணிகள் களமிறங்குகின்றன. போட்டியை சோனி டிவி நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. இந்தப்போட்டியை தொடங்கி வைக்க, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து லீக் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்ததுடன் போட்டிக்கான சீருடை மற்றும் பந்தை வழங்கினர்.

* ஐபிஎல் தொடரில் டெல்லி அணி கேப்டனாக இருந்த ரிஷப் பன்ட் 2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கியதால், 2023 ஐபிஎல் தொடரில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் விளையாடாமல் ஓய்வில் உள்ளார். இந்நிலையில், டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங், ‘ரிஷப் உடல் நலம் பெற்றுள்ளார். அதனால் விரைவில் பயிற்சிக் களத்துக்கு திரும்புவார். அதுமட்டுமல்ல, 2024 ஐபிஎல் தொடர் முழுவதும் டெல்லி அணிக்காக விளையாடுவார். வெறும் பேட்ஸ்மேனாக இருப்பாரா இல்லை விக்கெட் கீப்பராகவும் தொடர்வாரா, கேப்டனாக செயல்படுவாரா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அவர் எங்கள் கேப்டன்தான் . எந்த வகையில் இருந்தாலும் சிறந்த வீரர். அதனால் அவரது பங்களிப்பு அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை’ என்றார்.

* யு-14 மேற்கு மண்டல கிரிக்கெட் போட்டியின் பைனலில் சவுராஷ்டிராவுடன் மோதிய மும்பை அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் வெற்றியை வசப்படுத்தியது.

* இங்கிலாந்து அணியுடன் ராஜ்கோட் மற்றும் ராஞ்சியில் நடக்க உள்ள டெஸ்ட் போட்டிகளிலும் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. காயம் காரணமாக 2வது டெஸ்டில் விளையாடாத கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா இருவரும் முழு உடல்தகுதியுடன் களமிறங்கத் தயாராகி உள்ளனர்.

The post சில்லி பாயிண்ட் appeared first on Dinakaran.

Related Stories: